உள்நாட்டு செய்திகள்புதியவை

அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் முறைமை!

தேர்தல் ஆணைக்குழுவால் கொண்டுவரப்பட்ட புதிய தேர்தல் முறைமை ஒன்று அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்காளர் ஒருவர் தமது வாக்கினை வழங்காதவிடத்து விஷேடமாக தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டின் மூலம் வாக்கினை பதிவு முடியும் என்ற முறைமை குறித்து தீர்மானிக்கப்பட்டது.

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல்கள் ஆணையாளரால் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்திய தேர்தலில் விஷேடமாக தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டின் மூலம் வாக்கினை பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால், நிராகரிக்கப்படும் வாக்குகளை  அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த முறைமைக்கு எந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆர்வம் காட்டாததனை அடுத்து இந்த திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க