சினிமா

ஜெயராமினால் தப்பித்தது நேசமணி சுத்தியல் காட்சி

பிரெண்ஸ் படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம் பல வருடங்களுக்கு பிறகு இணையதளத்தில் பிரபலமடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் அப்படத்தின் இயக்குனர் சித்திக் பேசியுள்ளார்.

மலையாளத்தில் வெற்றியடைந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த படத்தில் சுத்தியல் விழும் காட்சிகள் எல்லாம் மலையாளத்தில் இறுதி நாளிலேயே எடுக்கப்பட்டது.

காட்சியின் நீளம் கருதி அந்த பகுதியை நீக்குவதற்கு முயற்சித்தோம். எனினும் மலையாள நடிகர் ஜெயராம் தடுத்ததால் அப்படியே விடப்பட்டது.

அந்த படம் மலையாளத்தில் வெற்றி அடைந்ததால் தமிழிலும் அந்த காட்சிகள் வைக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.

அந்த காட்சியே தற்போது வைரலாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க