உள்நாட்டு செய்திகள்புதியவை

நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு மேலும் சிலருக்கு அழைப்பு!

காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி, தற்போதைய பொறுப்பதிகாரி மற்றும் சுபீ முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்கவுள்ளனர்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யும் வகையில் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஆறாவது அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது.

இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் ரிஸ்வி மௌலவி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மொஹம்மட் சுபெய், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க