அழகு / ஆரோக்கியம்

எள்ளில் உள்ள மருத்துவ பயன்கள்

எள்ளில் அதன் விதையின் நிறத்தைக் கொண்டு வெள்ளை , கறுப்பு என்ற வகைகள் உள்ளன . எள் இனிப்புச் சுவை கொண்டதுடன் , வறட்சியையும் அகற்றும் .

உடலை பலப்படுத்தும் . சிறு நீரைப் பெருக்கும் . பாலூட்டும் தாய்மாருக்கு பாலைப் பெருக்கும் . மலச்சிக்கலை குணமாக்கும் .

தினமும் காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலத்தை அதிகரிக்கச் செய்யும் என பண்டைய கால மருத்துவம் குறிப்பிடுகின்றது .

எள்ளில் இருந்து படிக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் எனப்படும் . இதனை உணவிற்காக பயன்படுத்துவோருக்கு , ஒரு முட்டையின் அளவு நல்லெண்ணெயை பருகி வந்தால் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் .

நல்லெண்ணெயை ஏழு நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து , சிறிது நேரம் ஊறிய பின் சுடுநீரில் குளித்து வந்தால் கண் சிவப்பு , கண் வலி குறையும் .

எள்ளின் பூவை நெய்யில் வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட கண் பார்வை தெளிவடையும் .

எள் இலையை நெய்யில் வதக்கி கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும் .

ஆதி காலத்தில் எள்ளை இயற்கையான கருத்தடை முறையாகவும் பயன்படுத்தினர் .

சுவாச மண்டல ஆரோக்கியத்தையும் பராமரிக்கின்றது . மேலும் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுப்பதோடு எலும்பின் அடர்த்தியையும் அதிகரிக்கச் செய்யும் . இரத்தக் குழாய்களை சீர்படுத்துவதோடு உடம்பின் கொழுப்பையும் குறைக்கும் . பல விதமான கான்சர் நோய்களையும் தடுக்கும் சிறப்பு தன்மையும் வாய்ந்தது .

கருத்து தெரிவிக்க