விளையாட்டு செய்திகள்

வருமான பட்டியலில் மெஸ்ஸிக்கு முதலிடம்

விளையாட்டுத் துறையில் கடந்த ஆண்டு அதிகம் உழைத்தவர்களின் பட்டியலில் காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

குறித்த  பட்டியலை Forbes இதழ் கடந்த 11 ஆம் திகதி வெளியிட்டது.

மெஸ்ஸி விளம்பரம், விளையாட்டு ஒப்பந்தங்கள் மூலம் 127 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருப்பவர் 109 மில்லியன் டொலர் ஈட்டிய காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

பிரேசில் காற்பந்து வீரர் நெய்மர் 105 மில்லியன் டொலர்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் (Roger Federer) 93.4 மில்லியன் டொலர்களுடன் ஐந்தாவது இடத்திலும் டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் 29.2 மில்லியன் டொலர்களுடன் 63ஆவது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே பெண் விளையாட்டாளர் செரினா வில்லியம்ஸ் எனபது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க