சீனாவில் பாலம் திடீரென உடைந்து ஆற்றுக்குள் விழுந்ததில், காரில் பயணம் செய்த 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
குவாங்டாக் மாகாணத்தில் உள்ள டோங்ஜியாங் நதியின் குறுக்கே உள்ள பலமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.
குவாங்டாக் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் டோங்ஜியாங் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நதியின் குறுக்கே ஆயிரத்து 377 அடி நீளத்திற்கு கட்டப்பட்ட பாலம் சேதமடைந்திருந்தது.
இந்நிலையில் குறித்த பாலம் சுமார் 390 அடி நீளத்திற்கு இடிந்து பாலத்தின் நடுப்பகுதி திடீரென உடைந்து விழுந்துள்ளது.
அந்த சமயத்தில் குறித்த பாலத்தில் காரில் சென்ற மூவர் காருடன் நதியில் விழுந்துள்ளனர். காருடன் விழுந்தவர்களைத் தேடி வருவதாக குவாங்டாங் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க