அழகு / ஆரோக்கியம்

மாதுளையின் மருத்துவ குணங்கள்….

மாதுளை பல நோய்களைக் கட்டுப்படுத்தி , உடலை வளமாக்க பயன்படுகிறது . மாதுளையின் இலை , பூ . காய் . பிஞ்சு , பழம் . வேர் , பட்டை , போன்ற அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் அடங்கியது .

மாதுளையின் பூவும் . பழத்தோலும் அதிக இரத்தப் போக்கை கட்டுப்படுத்தக் கூடியது .பூ பசியை தூண்டும் . மரப்பட்டை வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும் .

மயக்கம் . தலைச்சுற்றல் , தொண்டை வறட்சி போன்றவற்றிற்கு மாதுளம் பழச்சாறு 100 மி.லி அளவு காலையில் வெறும் வயிற்றில் பருகி வர குணமாகும் .

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏற்படும் . இதனைப் போக்குவதற்கு மாதுளம் பழச்சாற்றில் சிறிதளவு கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் குணமடையும் .

மாதுளம் பிஞ்சை பசை போல அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு கப் மோருடன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று தரம் பருகி வர வயிற்றோட்டம் குணமாகும் .

மாதுளம் பூவை அரைத்து 15 மி.லி அளவு சாறில் சிறிதளவு கற்கண்டு கலந்து காலையில் இரண்டு கிழமைகள் தொடர்ந்து பருகி வர இரத்த மூலம் கட்டுப்படும் .

மாதுளம் பழம் உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும் . அத்துடன் உயிரணுக்களின் வளர்ச்சியையும் ஒழுங்குபடுத்துகிறது

கருத்து தெரிவிக்க