இந்திய இலங்கை மற்றும் மாலைத்தீவின் புலனாய்வு அதிகாரிகள் கொழும்பில் சந்தித்து முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் இந்த மாத முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய நாடுகளின் சபையின் ஆதரவில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தக்கலந்துரையாடலில் சிவில் மற்றும் இராணுவப்புலனாய்வு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பயங்கரவாதம், போதைவஸ்து உட்பட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்காலத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து கலந்துரையாடுவது என்று மூன்று தரப்பும் இணங்கியுள்ளன.
இதேவேளை மூன்று நாட்டு புலனாய்வாளர்கள் இணைந்துள்ளமையால் இந்த குழுவினருக்கு “மூன்று கண்கள்” என்று உத்தியோகபூர்வமற்ற முறையில் பெயரிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க