சினிமா

பாடப்புத்தகத்தில் ரஜினி கேள்வி எழுப்பும் சீமான்

5ம் தரத்துக்கான பாடப்புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்தை உழைப்பிற்கு முன்மாதிரியாக குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா? என இது தொடர்பில்  கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு சுந்தர் பிச்சை போன்றவர்கள் இடம்பெற்றால்தான் அது முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க