46-வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் பிரேசிலில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் மாதம் 7-ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
தென் அமெரிக்க கண்டத்தை சார்ந்த அணிகளுக்காக நடத்தப்பட்டு வரும் இந்த போட்டியில் 10 தென் அமெரிக்க கண்டங்களை சேர்ந்த அணிகளோடு ஆசிய கண்டத்தை சேர்ந்த ஜப்பான், கட்டார் ஆகிய அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்கின்றன.
இதில் பங்கேற்கும் 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் பிரேசில், பொலிவியா, வெனிசுலா, பெரு, ஆகியவையும், ‘பி’ பிரிவில் ஆர்ஜென்டினா, கொலம்பியா, பராகுவே, கட்டார் மற்றும் , ‘சி’ பிரிவில் 15 முறை சம்பியனான உருகுவே, ஈகுவடார், ஜப்பான், நடப்பு சம்பியன் சிலி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று நிறைவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்குள் தகுதி பெரும். அத்துடன் 3-வது இடத்தை பெறும் சிறந்த 2 அணிகளும் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
8 முறை சம்பியனான பிரேசில் அணி முன்னணி வீரர் நெய்மர் காயத்தால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இதேவேளை 14 முறை சம்பியனான ஆர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சி மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கருத்து தெரிவிக்க