இலங்கைக்கு தீவிரவாத முறியடிப்புக்கான கருவிகள் மற்றும் பயிற்சி உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஜப்பான், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ரொஷிகோ அபே, நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே, ஜப்பான் இந்த உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடலோர பாதுகாப்பு படைகளுடனான ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க