உள்நாட்டு செய்திகள்புதியவை

நான்கு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணை அறிக்கையை வழங்க பணிப்புரை!

நான்கு முக்கிய குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவிற்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன்படி, லசந்த விக்ரமதுங்க கொலை, வசீம் தாஜுதீன் கொலை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மற்றும் மூதூரில் அரச சார்பற்ற அமைப்பொன்றின் 17 பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கைகளை சட்ட மா அதிபர் கோரியுள்ளார்.

இது தொடர்பான பணிப்புரையை சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் ஊடாக விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க