பயங்கரவாத தடுப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் இலங்கையும் ஜப்பானும் உயர்மட்ட சந்திப்பை நடத்தியுள்ளன.
இந்த சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் ஜப்பானிய வெளியுறவு ராஜாங்க அமைச்சர் டஸ்கிகோ அபெயுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்றது.
இதன்போது பயங்கரவாத தடுப்பு விடயத்தில் ஜப்பானின் தொழில்நுட்ப உதவியை இலங்கையின் பிரதமர் கோரினார்.
அத்துடன் கடல்பாதுகாப்பு தொடர்பிலும் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர்.
இதேவேளை இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு அரசியல் மற்றும் சமய ரீதியாக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களை நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர் இது தொடர்பான கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
அதில் உயிர்த்த ஞாயிறுத்தாக்குல்களின் பின்னர் முஸ்லிம் மக்கள் மீது இந்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தை தகர்த்துவிடும்.
எனவே ஜனாதிபதி, பிரதமர் உட்பட்ட அரசியல் தலைவர்களும் சமூக தலைவர்களும் இனத்துவ விழுமியங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கோரியுள்ளன.
தேசியவாதிகள் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை புறக்கணிப்பதும் தொடர் குற்றச்சாட்டுக்களை ஊடகங்களில் வெளியிடுவதும் பிரச்சனையை பெரிதாக்கும் என்றும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து தெரிவிக்க