உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எதிர்கால இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும்- அமரிக்கா

இலங்கையின் எதிர்கால அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கமாக இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக அமரிக்கா தெரிவித்துள்ளது.

அமரிக்காவின் முன்னிலை அதிகாரி ஒருவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து அமரிக்காவுடன் இணைந்து செயற்பதிலேயே அமரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் செய்தியாளர்கள் சிலரை சந்தித்த அவர், அமரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தை பற்றி கூறும்போது, பொம்பியோ, உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பில் தமது கவலையை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிப்பார் என்று கூறினார்.

அத்துடன் இலங்கையில் அவர் இந்து-பசுபிக் மூலோபாயத்திட்டத்தின்கீழ் இலங்கைக்கான உதவிகள் குறித்தும் ஆராய்வார் என்றும் அமரிக்க அதிகாரி தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க