தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால் எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(11) கண்டியில் இடம்பெற்ற போதே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத செயற்பாடுகள் ,வன்முறைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக துறந்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மகாநாயக்க தேரர்களுக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர்.
இங்கு கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன் எம்.பி தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் போலித்தன்மை குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கினார்.
கருத்து தெரிவிக்க