உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஒரே கல்லில் நூற்றுக்கணக்கான பறவைகளை கொன்ற அரசாங்கம்-மஹிந்த குற்றசாட்டு

அரசாங்கம் ஒரே கல்லில் நூற்றுக்கணக்கான பறவைகளை கொன்றுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”அண்மையில் முஸ்லீம் அமைச்சர்கள் பதவி விலகியதன் மூலம் நாட்டு மக்களின் கவனம் திசைதிருப்பபட்டுள்ளது. அரசாங்கம் நழுவல் போக்கில் செயற்படுகின்றது.

தற்போது மத்திய வங்கி ஊழல், கடன் நெருக்கடி என்பன மறக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் வைத்தியசாலையில் உள்ளனர் அவர்களும் மறக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளைப்பற்றி இப்போது பேசப்படுவதில்லை. ஆயுதங்களை கண்டுபிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பேசப்படுவதில்லை.

இவ்வாறு நூற்றுக்கணக்கான பறவைகள் ஒரே கல்லில் கொல்லப்பட்டுள்ளன “என மஹிந்த ராஜபக்ஷ குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி முஸ்லீம் சமூகத்தை தமது தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி கொண்டுள்ளது என மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க