சினிமா

வைரலாகும் ரஜினியின் புகைப்படம்

ரஜினி தற்போது தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது பேரன் வேத் கிருஷ்ணாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் தர்பார் படப்பிடிப்பு தளத்தில் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ரஜினியின் கெட்டப் இது தான் என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதனை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது தொலைபேசியில் படம் பிடித்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் லேசான தாடியுடன் இளமை தோற்றத்தில் இருக்கிறார்.

கருத்து தெரிவிக்க