சினிமா

ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்பும் தமன்னா

நடிகர்,நடிகைகள் வாழ்க்கை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் தமன்னா நடிகை ஸ்ரீதேவி பாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,‘‘ஸ்ரீதேவி வாழ்க்கையை படமாக எடுத்தால் அவரது வேடத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஸ்ரீதேவியாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சிறுவயதில் இருந்தே எனக்கு ஸ்ரீதேவி பிடித்த நடிகை’’ என்றார்.

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க போனிகபூர் தயாராகி வருகிறார். அந்த படத்திற்கான நடிகை தேர்வு இடம்பெற்று வருகிறது . இந்த நிலையிலேயே தமன்னா தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க