வேக கட்டுப்பாட்டை இழந்து எல்ல பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாயவில் இருந்து அல்ப நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எல்ல 15ஆம் கட்டை வீதிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றிரவு 9 மணியளவில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி 600 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 38 மற்றும் 37 வயதுடைய இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டியில் 6 பேர் பயணித்துள்ளதுடன், படுகாயமடைந்த நால்வர் பதுளை பொது வைத்தியசாலை மற்றும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க