உள்நாட்டு செய்திகள்புதியவை

தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை ஏற்றுக்கொள்வதாக தேரர்கள் தெரிவிப்பு!

கன்னியா வெந்நீர் ஊற்றில் தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை ஏற்றுக்கொள்வதாக கன்னியா விகாரை தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னியா விகாரை தேரர்களுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பெளத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும் தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளாகத்துக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும், வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோ கணேசனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், வேலுகுமார், சுசந்த புச்சிநிலமே,ஆகியோருடன், திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார, கன்னியா விநாயகர் ஆலயம் சார்பாக கணேஷ் கோகிலரமணி, கன்னியா விகாரை தேரர்கள், ஜ.ம.மு. அமைப்பு செயலாளர் ஜனகன், ஜ.ம.மு. பிரசார செயலாளர் பரணிதரன் ஆகியோர் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.

கருத்து தெரிவிக்க