பொதுவழங்கல் மற்றும் பொருளாதார மீளமைப்புத்துறை அமைச்சர் ஹர்ச டி சில்வா, உடல்மொழி(Body Language) தொடர்பில் தேர்ச்சியை கொண்டிருக்கிறார் என்ற தலைப்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்தபோது அவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வானூர்தி தளத்தில் வைத்து வரவேற்றார்.
இதன்போது நரேந்திரமோடி ரணிலுக்கு கைலாகு கொடுத்து ஏதோ பேசுகின்றார்.
இதனை வைத்துக்கொண்டு அமைச்சர் ஹர்ச டி சில்வா, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த இந்திய புலனாய்வுப்பிரிவின் தகவல்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்காமை தொடர்பில் தமது வருத்தத்தை வெளியிடுவதாக புகைப்படத்தில் உள்ள உடல்மொழியை வைத்துக்கொண்;டு தமது டுவிட்டர் பதிவில் குறிப்பி;ட்டு;ள்ளார்.
எனினும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கடந்தவார விசாரணையின்போது இந்த தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்கள் எந்தநாட்டில் இருந்து வந்தன என்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று இலங்கையின் புலனாய்வு அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தமையை ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து தெரிவிக்க