உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மோடி முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்காமை கவலையளிக்கிறது!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்திய தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு ஸ்டாலினின் வீட்டில் இடம்பெற்றுள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவூப் ஹக்கீம் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளச் சென்றுள்ள வேளையிலேயே அவர் ஸ்டாலினின் வீட்டுக் சென்று இன்று சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது நாட்டில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், இலங்கையில் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ஒரு சில மணித்தியால விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய பிரதமர் மோடி, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுடன் சந்திப்பை மேற்கொள்ளாமை கவலைக்குரிய விடயம் எனவும் முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஸ்டாலினுக்கு அழைப்பொன்றையும் முன்னாள் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது சிறுபான்மைக் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க