பாடசாலைகளில் விநியோகிக்கப்படும் அலுவலர் ஆள் அடையாள அட்டை விநோயோகத்தில் அதிகளவு நிதி வசூலிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் அலுவலர் அடையாள அட்டை விநியோகிப்பதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களிடம் இருந்து மாறுபட்ட தொகைகளில் பணம் அறவிடுவதாக அறியக்கிடைத்துள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள பிரபல தேசிய பாடசாலையில் புகைப்படத்துடன் ரூபாய் 200 அறவிடப்பட்டுள்ள நிலையில், அதே கல்வி வலயத்திலுள்ள சில தேசிய பாடசாலைகளில் புகைப்படத்துடன் ரூபாய் 300 தொடக்கம் ரூபாய் 350 வரை அறவிடப்பட்டுள்ளது.
திணைக்கள அடையாள அட்டை விநியோகம் தொடர்பாக சட்ட விதிகளுக்கு அமைவான விலைமனு கோரப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை அலுவலர் அடையாள அட்டையை தேசிய ஆடையாள அட்டைக்கு நிகராக வைத்திருக்க வேண்டும் என்று அரசாங்கம், எந்தவித சுற்று நிருபங்களையும் அனுப்பவில்லை என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க