அபராத தொகையாக உயர்த்துவதற்கான சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் முயற்சித்தால் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச அபராத தொகையாக 3000 தொடக்கம் 25,000 ரூபாவாக உயர்த்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அபராத தொகையை அதிகரிப்பதனால் மட்டும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த இயலாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபராத தொகை அதிகரிப்பு சம்பந்தமாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதைக் கருத்திற்கொள்ளாது நாடாளுமன்றத்தில் இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது எனவும் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டினார்.
கருத்து தெரிவிக்க