கண்டி தலதா மாளிகைக்கு தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், அதுதொடர்பில் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென மல்வத்து பீட வணக்கத்திற்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
தலதா பெரஹரவில் ஏதாவதொரு அசம்பாவிதம் நடைபெறலாம் என்பது தெளிவாக இருப்பதாகவும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுத்து அதனை எதிர்கொள்வதற்கு சில அமைப்புக்கள் இருப்பதாகவும் பொதுமக்களின் சோதனைக் குழுக்கள் அத்தியாவசியம் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
என்றபோதிலும் சம்பிரதாயபூர்வமாக இம்முறையும் கண்டி எசல பெரஹர ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் ஆரம்பமாகும். அதன்படி 2ம் திகதி ஆரம்பமாகும் எசல பெரஹரவின் கும்பல் பெரஹர ஆகஸ்ட் 5ம் திகதி ஆரம்பமாகும்.
அது ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரந்தோலி பெரஹர ஆகஸ்ட் 10ம் திகதி ஆரம்பமாகும். அது 14ம் திகதி வரை இடம்பெறும். 15ம் திகதி பகலுடன் கண்டி பெரஹர நிகழ்வுகள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க