கிழக்கு செய்திகள்

பிரதான வீதியைப் புனரமைத்து தாருங்கள்- படுவாங்கரைபகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு-படுவாங்கரைப் பிரதேசத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட முனைக்காடு, முதலைக்குடா கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்து தருமாறு முதலைக்குடா மக்கள் இன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

“காலங் காலமாய் எம்மை ஏமாற்றிப் பிழைக்காதே அரசே” , “வீதி அபிவிருத்தி அமைச்சே விரைந்து செய் உன் சேவையை” , “அபிவிருத்திக்கு அனுமதிக்கப்பட்ட வீதி மாற்றப்பட்டது ஏன்” , “அடைப்பு போடும் வீதி வேண்டாம் ஆரோக்கியமான வீதி வேண்டும்” , போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், மிக நீண்ட காலமாக இவ்வீதி குன்றும் குழியுமாக, காணப்படுகின்றது, இதனால் பாடசாலை மாணவர்கள், உட்பட பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான இவ்வீதியைப் புனரமைப்புச் செய்து தருமாறு அதிகாரிகரிகளிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தும் அது இன்றுவரை நிறைவேறவில்லை. ஐ புறஜக்ற் திட்டத்தின் கீழ் இவ்வீதி செப்பனிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.எனினும்  நடவடிக்கை  எடுக்கப்பட வில்லை. இதனால் நாம் வீதிக்கிறங்கிப் போராடுகின்றோம் என கூறினார்கள்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்ப்பலிங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார். இதன் போது ‘வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு பல தடவைகள் சென்று கதைத்திருக்கின்றேன்.

இவ்வீதி புனரமைப்புக்கு அனுமதி வந்துள்ளது என தெரிவிக்கின்றார்கள். ஆனால் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புனரமைக்க முன் வரும் பட்சத்தில்  எமது பிரதேச சபை சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கும்’ என தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க