வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன பதவியிலிருந்த காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் கொடுப்பனவுகளாக 2080500 ரூபாய் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் இருவரும் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இருவருக்கும் 16 வருட கடூழிய சிறைதண்டனையும்
தலா இரண்டு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்குமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க