இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் நிமித்தம் எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் ஏப்ரல் 04ம் திகதி முதல் 06ம் திகதி வரை மாலை 06 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் சாலை அவ்வப்போது மூடப்படுவதோடு ஏப்ரல் 05ம் திகதி காலி முகத்திடல்,சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்ல பகுதிகளை சுற்றியுள்ள சாலைகளும் மூடப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க