வாக்காளர் விண்ணப்பப்படிவங்கள் உரிய முறையில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல் செயலகத்தினால் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பீசீ விண்ணப்பப் படிவம் வீடு வீடாக விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த காலப்பகுதியில் கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், சில கிராம சேவகர் உத்தியோகத்தர்களின் பகுதிகளில் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக சில பீசீ விண்ணப்பப் படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்காமல் அதனை பூர்த்தி செய்து தேர்தல் செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு பிரதி தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் தலைமையில் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 14ம் திகதி மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க