சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஹொங்கொங்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹொங்காங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர்.

இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹொங்காங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.

20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்த நிலையில், ஹொங்காங்கில் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இதனை ஆட்சேபித்தே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க