உலகம்

சீனப் பொருளாதாரத்துடன் தொடர்புகொள்ள விரும்பும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள்

கொவிட் 19 நோய் பரவலின் பாதிப்பினால், உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத் துறையில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. சீனப் பொருளாதார இணைப்பிலிருந்து பிரிந்து செல்ல விரும்புவதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.


நியூயார்க் டைம்ஸ் எனும் அமெரிக்க செய்தித்தாள் 15ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில், உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் காப்பதற்கு சீனாவின் பொருளாதாரத் திறமை கடைசி வாய்ப்பு என்றும், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் சீனப் பொருளாதாரத்துடனான தொடர்பைத் துண்டிக்க விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டு பொருளாதார அதிகரிப்பைக் காணும் சில நாடுகளில் சீனா ஒன்றாக இருக்கும்.

ஜப்பானில் உள்ள கோல்ட்மேன் சக்ஸ் குழுமத்தின் ஜப்பானிய பங்கு துறை ஆலோசகர் கேத்தி மட்சுயி கூறுகையில், உலகில் உள்ள நாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன. சீனப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான அதிகரிப்பு, உலகில் அனைத்து பொருளாதார வல்லுனர்களுக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.

தகவல் -சீன ஊடகக் குழுமம்

கருத்து தெரிவிக்க