இந்தியா

நம் வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு என்ன தைரியம்.. மோடி மௌனம் ஏன்? எதை மறைக்கிறார்- ராகுல்

ஸ்ரீநகர்: லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, நமது வீரர்களை கொல்வதற்கும், நிலத்தை அபகரிக்கவும் சீனாவுக்கு என்ன தைரியம், பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 43 பேர் வரை மரணம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எல்லையில் சீனாவின் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டிருந்த ட்விட் பதிவில், “நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ அதிகாரி உள்ளிட்ட வீரர்களின் தியாகம் எனக்குள் ஏற்படுத்தும் வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை., உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; இந்த கடினமான காலகட்டத்தில் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம்” என்று கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க