நீரழிவு நோய்க்கு நிரூபிக்கப்பட்ட மருந்து நெல்லிக்காய் . வேறு எந்த காய்கறிகளிலும் இல்லாத அளவிற்கு விற்றமின் ‘ சி ‘ நெல்லிக்காயில் காணப்படுகிறது. இது புளிப்பு , இனிப்பு , துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது . நெல்லிக்காய்களின் இலைகள் ஏலக்காய் செடிகளுக்கு உரமாகவும் பயன்படுகின்றன . இதன் இலை , காய் , வற்றல் ஆகியன மருத்துவப் பயன் கொண்டவை . குளிர்ச்சி தன்மையை கொண்டுள்ளதால் கண்களுக்கு குளிர்மையைத் தரும். செரிமானத்தை தூண்டும். உடற்சூட்டைத் தணிக்கும் . மலச்சிக்கல் , சளி , இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் . நோய் எதிர்ப்புச் சக்தியை தரும் .
நெல்லிக்காய் சாறுடன் மஞ்சள் சேர்த்து உட்கொண்டால் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் .
நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வந்தாலும் அல்லது அதனை துவையல் செய்து சாப்பிட்டு வந்தாலும் நீரழிவு நோய் குணமாகும் .
நெல்லியின் விதைகளை நீரில் ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தாலும் நீரழிவு நோய் கட்டுப்படும் .
நம் முன்னோர்களாலும் சித்தர்களாலும் ‘காயகல்பம்’ என்று அழைக்கப்பட்ட நெல்லிக்கனியை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம் .
கருத்து தெரிவிக்க