உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

ஒரு புத்த பிக்கு நாடகமாடினால் அதற்காக மட்டக்களப்பில் நாடகம் தேவையில்லை- ஜனா

தலதா மாளிகைக்கு முன்னால் ஒரு புத்தபிக்கு நாடகமாடுகின்றார் என்பதற்காக, அவருக்கு உறுதுணையாக நாங்கள் நாடகமாடக் கூடாது.

இன்றுவரை புத்த பிக்குகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்;

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புத்தர் சிலை வைத்து விகாரை அமைப்பதற்கு ஒரு புத்த பிக்கு முயற்சிக்கின்றார்,

அதுபோல் திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்றுப் பகுதியில் பிள்ளையார் சிலையை உடைத்து விட்டு புத்தர் சிலை வைப்பதற்கு இன்னுமொரு பிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்.

மட்டக்களப்பு மங்களராமய புத்த பிக்கு கெவுளியாமடு கிராமத்தில் கிராம சேவகர் ஒருவரை கெட்ட வார்த்தைகள் கூறி அவதூறு செய்தார்,

அதே பிக்கு மட்டக்களப்பு பிள்ளையாரடியிலே புத்தர் சிலை வைக்க முயற்சி செய்தார்,
இந்தநிலையில் தலதா மாளிகைக்கு முன்னால் ஒரு புத்த பிக்கு நாடகமாடுகின்றார் என்பதற்காக, அவருக்கு உறுதுணையாக நாங்கள் நாடகமாடக் கூடாது. மட்டக்களப்பிலே அந்த நாடகம் அரங்கேறியிருந்தது.

இந்தக்கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் கம்பரெலிய வேலைத் திட்டத்தினூமாக 60 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட 3 வீதிகள் திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு களுதாவளையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கருணாகரம் தமது கருத்துக்களை வெளியிட்டார்.

நூற்றுக்கணக்கன அரசியல் கைத்திகள் சிறையிலே வாடுகின்றார்கள், ஆயிரக்கணக்கான எமது காணிகள் சூறையாடப்படுகின்றன,

அதற்காக உண்ணாவிரதமிருந்திருக்கலாம் என்றும் கருணாகரம் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க