வவுனியா பம்பைமடு கல்வெளி பகுதியில் கல்குவாரியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் காணப்பட்ட நீர்த்தேக்கத்தில் இன்று மதியம் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பம்பைமடு இராணுவ முகாமுக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் கடந்த காலத்தில் கல்லுடைக்கும் குவாரி .அமைநதிருந்தது.
எனினும் குறித்த நீர்த்தேக்க கிடங்கு மூடப்படாமையால் அதில் நீர் தேங்கியிருந்துள்ளது. இதனை கண்னுற்ற பாடசாலை மாணவர்கள் அதில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
இதன் போது அவர்களில் நால்வர் குளிப்பதற்காக நீரில் இறங்கிய சமயத்தில் நால்வரும் நீரில் முழ்கியுள்ளனர்.
அவர்களில் சத்தம் கேட்டு அவர்களுடன் சென்ற நண்பர்கள் நீரில் முழ்கியவர்களை காப்பாற்றுவதற்கு முயன்றுள்ளனர். எனினும் இருவரை மாத்திரமே காப்பாற்ற முடிந்துள்ளது.
பின்னர் அவரது நண்பர்கள் அருகேயுள்ள இரானுவ முகாம் மற்றும் அயலவர்களுக்கு சம்பவத்தினை தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அயல் கிராம இளைஞர்கள் நீரினுள் குதித்து பல மணிநேர போராட்டத்தின் பின்னர் குறித்த இரு மாணவர்களையும் சடலமாக மீட்டெடுத்துள்ளனர்.
வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவனாக சந்திரகுமார் யுட் (வயது -18) மற்றும் பன்றிகேய்தகுளம் அ.த.க பாடசாலையினை சேர்ந்த முத்துராசா சுரேஸ் (வயது-15) ஆகிய இரு பாடசாலை மாணவர்களே சடலமாக மீட்கப்பட்டவராவார்
மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க