இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முதன்முறையாக டைனோசருக்கான அருங்காட்சியகத்துடன் பூங்கா ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய டைனோசரின் எலும்புக்கூடு காணப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ள நைரோபி கிராமத்திலேயே இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கைக்கு அமைய கடந்த ஐந்து வருட காலமாக கட்டப்பட்ட இந்த அருட்காட்சியகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட விரும்புபவர்கள் அகமதாபாத்திற்கு சென்று அங்கிருந்து அரை மணித்தியால பயணம் மேற்கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் தொல்பொருள் ஆய்வாளர்களால் பாதுகாக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க