தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது ஆறு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் வருகிற 23 ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளது.
இதனால் போட்டியிடும் நடிகர்களை தெரிவு செய்யும் பணிகள் இடம்பெற்று தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியை சூர்யா விவேக் ஆகிய நடிகர்கள் முன்மொழிந்து வழிமொழிந்து உள்ளனர்.
இந்நிலையில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சிபிராஜை நடிகர் சூர்யா முன் மொழிந்துள்ளார்.இதேவேளை துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பூச்சிமுருகனை நடிகர் விவேக் முன்மொழிந்துள்ளார்
கருத்து தெரிவிக்க