விளையாட்டு செய்திகள்

டென்னிஸ்: வெற்றியாளரானார் அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் வென்றுள்ளார் அவுஸ்திரேலியா வீராங்கனையான ஆஷ்லி பார்டி .

8-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), 38-ம் நிலை வீராங்கனையான மார்கெட்டா வோன்ட்ரோசோவாவுடன் (செக்குடியரசு) நேற்று இறுதி ஆட்டத்தில் மோதினர் .

இதில் அனுபவம் வாய்ந்த ஆஷ்லி பார்டியின் கை முதல் புள்ளியில் இருந்தே ஓங்கியது. 70 நிமிடங்களில் வோன்ட்ரோசோவாவின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த ஆஷ்லி பார்டி 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் மகுடத்தை சூடினார்.

அவுஸ்திரேலியா வீராங்கனை ஒருவர் கிராண்ட்ஸ்லாம் வெல்வது 1973-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் ஆஷ்லி பார்டி தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறுகிறார். அவருக்கு ரூ.18 கோடியும், 2-வது இடம் பிடித்த 19 வயதான வோன்ட்ரோசோவாவுக்கு ரூ.9 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க