உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

முஸ்லிம்கள் அராபிய கலாசாரத்தை விட்டு இலங்கை கலாசாரத்துக்கு மாறவேண்டும்

அராபிய கலாசாரத்தில் இருந்து இலங்கை முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம் கலாசாரத்துக்கு மாறவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதவிவிலகிய முன்னாள் அமைச்சர்களை இன்று சந்தித்தபோதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

இலங்கையை பொறுத்தவரை சில ஜிகாத்தியர்கள் காரணமாகவே பிரச்சினைகள் உருவாகின்றன.
இவர்களின் நடவடிக்கை காரணமாக இலங்கையின் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் இருந்த முஸ்லிம் கலாசாரம் மாறி இன்று அராபிய கலாசாரம் வளர்ச்சிப்பெற்றுள்ளது.

இந்த அராபிய கலாசாரம் காரணமாக முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களிடம் இருந்து தனித்துவிடப்பட்டுள்ளனர்.

இந்த கலாசாரம் இலங்கையில் நல்லிணக்கத்தை பாதித்துள்ளது என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

இதன்போது அராபிய கலாசாரம் முஸ்லிம் கலாசாரத்தில் ஒரு அங்கம் என்று முஸ்லிம் பிரதிநிதிகள் வாதிட்டனர்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத மஹிந்த ராஜபக்ச முஸ்லிம் கலாசாரம் தொடர்பாக தமக்கு கூறவேண்டிய அவசியம் இல்லை.

தமது சொந்த ஊர் ஹம்பாந்தோட்டையில் முஸ்லி;ம்கள் இருக்கின்றனர்.

அராபிய கலாசாரம் என்பது சுமார் 15 வருடங்களுக்கு முன்னரே இலங்கையின் முஸ்லி;ம்களால் வரழைக்கப்பட்டது.

இதற்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுக்கு என்று தனியான கலாசாரம் இருந்தமை தமக்கு தெரியும் என்றும் மஹிந்த ராஜபக்ச முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க