சினிமா

நடிகர் சங்க தேர்தலில் அரசியல் வேண்டாம் -நடிகை லதா

தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலில் அரசியலை கலக்காதீர்கள் என நடிகை லதா தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் நாசர் சார்பில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்கியராஜ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதில் நாசர் அணியின் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகை லதா போட்டியிடவுள்ளார்.

தேர்தலின் பின்னணியில் அரசியல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது எமது தாய் வீடு என்று கூறியுள்ள அவர் இதற்கு முன்னால் செயற்பட்ட எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோர் அரசியலின்றி செயல்பட்டார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க