சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறி லங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்ததைகளின் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையில் பரஸ்பர இணக்கப்பாடுகள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலின் போது இருகட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு கட்சிகளுக்கும் இடையில் 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 17ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
சிறி லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரஇ நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால மற்றும் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறி லங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் துலாஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்து தெரிவிக்க