தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், தமது பதவியை இன்று சனிக்கிழமை இராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமா குறித்து அவரால் அனுப்பட்ட கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வில், இவர் சாட்சியமளித்திருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை தான் ஏற்கப்போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் தனது இராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க