அண்மையில் கொலை செய்யப்பட்டு கன்னியகுமாரி மாவட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இலங்கை அகதி தொடர்பில் இந்தியர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கொலை செய்யப்பட்ட நபர் காதலித்த பெண்ணின் சகோதரரும் அடங்குவதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராசி எனப்படும் கொலை செய்யப்பட்ட நபரை, குறித்த பெண்ணின் சகோதரர் காரில் ஏற்றிச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்து பின்னர் எரியூட்டியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
கடந்த மே 25 ஆம் திகதி இலங்கை அகதி முகாமிலிருந்து காணாமல் போயிருந்த குறித்த நபர் கன்னியாகுமரி-காரியமாணிக்கப்புரம் எனும் கல்லறை பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த நபரின் உடல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு அகதி அடையாளம் காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க