மலையகச் செய்திகள்

டிக்கோயா-ஹோர்லி தோட்டத்தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட டிக்கோயா-ஹோர்லி தோட்டத்தில் குளவி கொட்டியதில் தோட்ட கண்காணிப்பாளர் உட்பட 8 பெண்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள்  டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில் 1ம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்துகளை பறித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறான அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

பெண் தொழிலாளி ஒருவர் பறித்த தேயிலைச்செடியில் இருந்த குளவி கூடு கலைந்ததில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தேயிலை செடிகளிலிலும் மரங்களிலும் குளவிக்கூடுகள் காணப்படுவதாக தோட்ட நிர்வாகத்திடம் தெரிவித்த போதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையினாலே பாதிப்பு ஏற்பட்டதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

.

கருத்து தெரிவிக்க