வணிக செய்திகள்

திரிபோஷா தயாரிப்பிற்கு 600 டன் முழு ஆடைபால்மா பெறப்படவுள்ளது

திரிபோஷா தயாரிப்பில் சேர்க்கும் வகையில் மில்கோ நிறுவனத்திடம் இருந்து முழு ஆடைப்பால்மாவை பெரும் நோக்கில் முன்மொழியப்பட்ட திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மேற்படி சிபாரிசிற்கே இவ்வனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன் மூலம் போஷாக்கான சமூகத்தை உருவாகும் நோக்கில் திரிபோஷா தயாரிப்பிற்கென மில்கோவிடம் இருந்து 600 மில்லியன் டன் முழு அடைப்பால்மா பெறப்படவுள்ளது.

திரிபோஷா தயாரிப்பிற்கென வருடத்தில் சுமார் 1500 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க