உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தெரிவுக் குழுவின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தும் ஜனாதிபதி மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை உடனயாக இடைத்துமாறும் அதனை நிறுத்தும் வரை தாம் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தப்போவதில்லையென அமைச்சரவைக்கு அச்சுறுத்தலுடன் கூடிய அறிவிப்பொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் அவசரமாகக் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தெரிவுக் குழு தனது நற்பெயரை கெடுக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தெரிவுக் குழுவின் தலைவராக ஜயம்பத்தி விக்ரமரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கலாநிதி அஷூ மாரசிங்க, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அரசியல் ரீதியாக தமது நற்பெயருக்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில் செயற்படுவதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க