போயிங் 737 மேக்ஸ் ரக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன், காரணமாக அந்நிறுவனத்திடம் நட்டஈடு கேட்க உள்ளதாக, கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) குறிப்பிட்டுள்ளது.
737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்காமல் நிறுத்திவைக்கப் பட்டிருந்ததற்காகவும், அதற்கு பதிலாக வேறு விமானங்களை இயக்க நேர்ந்ததற்காகவும் போயிங் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்க உள்ளதாக கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் இரண்டு, 5 மாத கால இடைவெளியில் விபத்தில் சிக்கி, 346 பேர் உயிரிழந்த விவகாரத்தால், அவற்றை தயாரித்த போயிங் நிறுவனம் விமான சேவைகளை நிறுத்தி இருந்தது .
இந்த விபத்துகளின் காரணமாக , உலகம் முழுவதும் பல்வேறு விமான நிறுவனங்கள், 737 மேக்ஸ் ரக விமானங்களை சேவையில் இருந்து நிறுத்தி வைத்தன.
இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பிய நாடுகளுக்கு சொந்தமான மேக்ஸ் ரக விமானங்களே விபத்துக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க