சினிமா

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் எதிர்வரும் 23 ஆம் திகதி

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2019 – 2022 ஆம் ஆண்டுக்கான நடிகர் சங்க நிர்வாகிகளை தெரிவு செய்யும் இந்தத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து கே.பாக்யராஜ் போட்டியிடவுள்ளார்.

விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.

பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

கருத்து தெரிவிக்க