உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாதிகளின் சடலங்கள் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை பிரதான நீதவான் அசங்க ஹெட்டிவத்த முன்னிலையில் இன்று இச்சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது சுனாமி கிராமத்தில் உள்ள வீடொன்றில், பாதுகாப்புத்தரப்பினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதில் சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மே மாதம் 2 ஆம் திகதி இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க