சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகளினது சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரபணு சோதனைகள் மேற்கொள்ளும் நோக்கில் அம்பாறை நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய சடலங்கள் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது சுனாமி கிராமத்தில் உள்ள வீடொன்றில், ஏப்ரல் 26ஆம் திகதி பொலிஸாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து அந்த வீட்டிலிருந்து 6 ஆண்களினதும் 3 பெண்களினதும் 6 சிறுவர்களினதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
குறித்த சடலங்கள் பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான நபரான சஹரானின் நெருங்கிய உறவினர்கள் என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையிலேயே மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க